search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலையேற்ற பயிற்சி"

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 100 மாணவர்கள், தேசிய படை அதிகாரி வடிவேல் தலைமையில் மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்த பயிற்சி குறித்து மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை 9-வது பேரணி ஹவில்தார் சஞ்சீவிகுமார் விளக்கம் அளித்தார்.

    பின்னர் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையை மாணவர்கள் கடந்து சென்று, அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் காடுகளின் அவசியம் மற்றும் அவற்றை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் மரம் நடுதல் அவசியம் குறித்தும், தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் விளக்கினார்.

    குரங்கணி மலைப்பகுதியில், மலையேற்ற பயிற்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு மலையேற்றம் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இந்த பயங்கர தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடுத்தடுத்து உயிர் இழப்புகள் அதிகரித்தன. மொத்தம் 23 பேர் இறந்தனர்.

    நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் மலையேற்ற பயிற்சிக்கு, மே 31-ந்தேதி வரை தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அனுமதியற்ற பாதையில் மலையேற்றம் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வகையில் காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்கள் அனுமதி அளிக்கப்படாத மலையேற்ற பாதையில் சென்று இருந்ததால், குரங்கணியில் இருந்து கொழுக்குமலை செல்லும் மலைப்பாதையில் யாரும் மலையேற்றம் செல்லாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும், அங்கீகரிக்கப்பட்ட மலையேற்றப் பாதையான குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரையிலான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனை சாவடி அடைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் அனுமதி கிடைக்குமா? என்ற ஆசையில் கோடை கால விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் பலர் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுக்கு சோதனை சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர்.

    இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த தற்காலிக தடை காலமான மே 31-ந்தேதி முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக மலையேற்ற பயிற்சிக்காக குரங்கணிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தடையை விலக்கி மீண்டும் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், தடை நீடிப்பதால், சுற்றுலா பயணிகளை சோதனை சாவடியிலேயே வனத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். சுற்றுலா பயணிகளும் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை மலையேற்றம் செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தடையை விலக்கிக் கொள்வது தொடர்பாக அரசு உத்தரவு எதுவும் இன்னும் வரவில்லை. இதுதொடர்பாக தேனி மாவட்ட வனத்துறைக்கு முறையான உத்தரவு இன்னும் அளிக்கப்படவில்லை. அரசிடம் இருந்து மறுஉத்தரவு வரும் வரையில் தடை நீடிக்கும்’ என்றார். 
    ×